Sunday, 22 December 2013

என்றென்றும் புன்னகை - Review



 


என்றென்றும் புன்னகை' ஒரு இளமை திருவிழா என்றே சொல்லலாம். வாமனன் அகமதுக்கு இது ஒரு வெற்றி படம் எனலாம்.. கோ படத்துக்கு பிறகு ஜீவாவுக்கு இது ஒரு முக்கியமான படம் வாழ்த்துக்கள். அழகு நிலவாக த்ரிஷா.. வாவ் .. இன்னொரு சுற்றே வரலாம் த்ரிஷா அவ்வளவு அழகு.. கதை, ஜீவாவுக்கு பிறகு பாராட்டப்பட வேண்டியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.. சரி இதை விரிவாக பிறகு பார்ப்போம்.. இப்போது கதை... அப்பா நாசரின் வளர்ப்பில் வாழும் ஜீவா, அம்மா அப்பாவை விட்டு ஓடி போனதால், பெண்களைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறார். இவர் பள்ளியில் சேரும் போது வினய்யும், சந்தானமும் நண்பர்களாகின்றனர். வளர்ந்து மூவரும் பெரியவர்களானதும் விளம்பர கம்பெனி ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். குடிபோதையில திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்று மூவரும் சபதம் போட்டு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விளம்பரக் கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கும் கம்பெனியில் இருந்து இவர்களது விளம்பரத்தை கண்காணிக்க வருகிறார் திரிஷா. ஜீவாவோடு நட்பாகிறார். த்ரிஷா மூலம் ஜீவாவுக்கு அறிமுகமாகிறார் ஆண்ட்ரியா. த்ரிஷா, ஆன்ட்ரியாவுடன் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தை எடுக்கிறார் ஜீவா. விளம்பரம் பெரியளவில் வெற்றி ஆகிறது, இதனால் ஜீவாவுக்கும், ஆண்ட்ரியாவிற்கும் சண்டை நடந்து விடுகிறது.
ஒருநாள் திடீரென்று சந்தானமும், வினய்யும் தாங்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக ஜீவாவிடம் கூறுகின்றனர். ஆனால், இதை ஜீவா ஏற்க மறுத்து அவர்களை பிரிந்து ஒதுக்குகிறார். தனிமையில் தவிக்கும் ஜீவா, திரிஷாவுடனான இவரது நட்பு, மெல்ல மெல்ல காதலாக மாறுகிறது. ஜீவா திரிஷாவிடம் காதலை சொல்லி அவரை மணந்தாரா? பிரிந்த நண்பர்கள் சேர்ந்தாரா? என்பதெல்லாம் மீதி கதை..
ஜீவா இந்த படத்தில் இளமை ததும்ப அருமையாக நடித்துள்ளார். பெண்களுடன் பேசும்போது கடுப்பாவதும், ஆன்ட்ரியாவுடன் ரொமான்ஸ் பண்ணும்போதும், இறுதியில் காதலை சொல்லும்போது காட்டும் நடிப்பும் அபாரம்.
ரெண்டாவது ஹீரோ வினய், அழகான அந்த வினய் எங்கே போனார்? தொப்பை வினய் அடையாளமே தெரியல. நடிப்பும் சரி இல்லை. சந்தானம் சில சிரிக்க வைக்கிறார், சில இடங்களில் கடுப்பெதுகிறார். அழகு தேவதையாக த்ரிஷா படம் முழுக்க சிரிப்பால் நடிக்கிறார். ரெண்டு நாட்களுக்கு கண்ணிலேயே நிற்கும் அளவு அழகும் ப்ளஸ் அழுத்தமான நடிப்பும் என நெஞ்சை அள்ளுகிறார். சூடேற்றும் ஆண்ட்ரியா ஜீவாவோடு இழைகிறார், தியேட்டரில் கை தட்டல் வாங்குகிறார். நடிப்பிலும் பலே .. ஜெகன், நாசர், டி.எம்.கார்த்திக், அபிநய் என அனைவர் நடிப்பும் ஓகே. முதல் பாதி காமெடி, இரண்டாம் பாதி காதல் என படம் படகை மிதக்கிறது. காதல், நட்பு இரண்டிலும் ஈகோ கூடாது என்பதே படத்தின் கரு.. அதை அழகாய் சொன்ன இயக்குனருக்கு பாராட்டுகள்.
படத்திற்கு இன்னொரு ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜின் இசை. கடல் நான்தான், ஏலேயெலெ தோஸ்து, வானெங்கும் நீ மின்ன, பாடல்கள் அருமை. பின்னணி இசையிலும் பின்னுகிறார். மதியின் ஒளிப்பதிவு மனதை கவருகிறது. கழுவி வைத்த வானத்தை போல அத்தனை தெளிவு. பாராட்டுகள் மதி.
டாக்டர்.வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ் குமரன் தயாரித்த என்றென்றும் புன்னகை ஒரு காதல் வானவில் போல, அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் புன்னகை என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment